Other News

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கு எதிராக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் தனது மனுவில், எஸ்.ஐ.ஆர். பணியானது தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, வாக்காளர் […]

விமான நிறுவனங்களை எச்சரித்த ட்ரம்ப்!

விமான நிறுவனங்களை எச்சரித்த ட்ரம்ப்!

வெனிசுலாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு ட்ரம்ப் புதிய கட்டளையை பிறப்பித்துள்ளார். அதன்படி வெனிசுலா வான்வெளியை முழுவதுமாக மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு மோசமடைந்து வருவதாலும், இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதாலும், வெனிசுலா மீது பறக்கும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் (FAA) விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை” எதிர்த்துப் போராடவும், […]

இந்தோனேசியாவில் தொடரும் சோகம் – 248 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் தொடரும் சோகம் – 248 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் தொடரும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 3000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 78 பேர் காணாமல்போயுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவு மற்றம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சென்றடைவதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி தேவைப்படுபவர்களை அணுகுவதில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி சவாலான […]

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயமும் வெள்ளத்தில் மூழ்கியது

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயமும் வெள்ளத்தில் மூழ்கியது

முல்லைத்தீவு – வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயமும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களாக இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலால் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டிருந்தன. கடல்நீர் உட்புகுந்தும், வெள்ளப்பெருக்கும் இன்றும் குறையாமல் இருக்கின்றன. இலங்கையில் இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் ஆலயத்திற்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப சாமி பக்தர்கள் பூஜைக்கு பூக்கள் வாங்குவது வழக்கமாக இருக்கும் நிலையில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூவரத்து குறைந்து உள்ளதால் பூக்களின் விலை விண்ணை தொட்டுள்ளது நிலக்கோட்டையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் இதனால் பூ வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதை போல் முல்லை பூ ஒரு கிலோ 1400 ரூபாயும், கனகாம்பரம் ஒரு கிலோ 1000 ரூபாயும், […]

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலை எதிர்கொள்ள, பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மொத்தம் 215 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு வழங்க 110 சமையல் கூடங்கள் தயாராக உள்ளன; இன்று மட்டும் 32,500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு இலட்சம் பால் பவுடர் மற்றும் ஒரு இலட்சம் நிவாரண தொகுப்புகள் […]

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அஜித் ஆதிக் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிப் பெற்ற திரைப்படம் குட் பேட் அக்லி. அந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்து வைத்தாற் போல இருந்தது. அதற்கு முன் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த […]

தனுஷ் கதையை நிராகரித்தாரா ரஜினிகாந்த்?

தனுஷ் கதையை நிராகரித்தாரா ரஜினிகாந்த்?

இம்மாத தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் […]

ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 8வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று நடிகை ஆதிரை வெளியேற்றப்பட்டார். எனினும், ரசிகர்கள் மத்தியில் அவர் ஒரு சிறந்த போட்டியாளர், அவர் வெளியேற்றப்பட்டிருக்க கூடாது என்ற கருத்து வலுவாக இருந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், இந்த வார இறுதியில் வெளியேற்றம் ஏதுமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் […]

அரோரா Male சப்போர்ட் இருந்தால் தான் விளையாடுவாங்க.!

அரோரா Male சப்போர்ட் இருந்தால் தான் விளையாடுவாங்க.!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தைப் பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பான திருப்பங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். தற்போது, சில போட்டியாளர்கள் வெளியேறியதால், வீட்டில் 15 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களின் சண்டைகளும், கலகலப்பும் பிக்பாஸ் ரசிகர்களை சற்று ஈர்த்துவந்துள்ளது. இந்த […]