Other News

புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை – விமல் வீரவன்ச

சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்களை நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது. புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக இன்று (08) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் […]

புங்குடுதீவு கடலில் காணாமல்போன 3 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த மூன்று மீனவர்களும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இந்த மூன்று மீனவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்குச் சென்றிருந்த நிலையில், கரை திரும்பாமல் காணாமல்போயிருந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணிகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடற்றொழில் அமைச்சரின் நேரடிப் பணிப்புரைக்கு அமைவாக, கடற்படையினர் தமது படகுகள் மூலம் […]

இந்தியா கூட்டணி கூட்டம்: தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன்?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தவெக அழைப்பு விடுக்கப்படவில்லை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை எம்.பி. கொண்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே இந்த முதற்கட்ட கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், கூட்டணியின் அடுத்தடுத்த கூட்டங்களில் தவெகவை அழைப்பது குறித்து முறைப்படி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச கமெண்ட்… இளைஞருடன் நடிகை குஷ்பு வார்த்தை மோதல்

நடிகை த்ரிஷா தனது X பக்கத்தில் Double Occupancy என்ற படத்தில் ட்ரைலரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்ட்டிற்கு பதிலளித்த நடிகை குஷ்பு, “ஒரு அப்பனுக்கு பிறந்திருந்த உன்னோட முகம் காட்டு, உன்னோட பேர் என்ன என கேட்டிருந்தார்.” அதற்கு அந்த இளைஞரும் மிகவும் மோசமான வார்த்தைகளால் பதிலளித்திருந்தார். மேலும் விடாமல் நடிகை குஷ்பு அந்த இளைஞருடன் வார்த்தை மோதலில் […]

இந்தியா கூட்டணி ஆலோசனையில் பங்கேற்ற திருமா, வைகோ

டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தை திமுக ஏற்கனவே புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சியும் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், வைகோ மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் ஜோசப் விஜய்யை தோற்கடித்த பிரக்ஞானந்தா

நார்வே செஸ் தொடரை வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா, தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்த பின் பேட்டியளித்துள்ளார். அப்போது, “CM விஜய் செஸ் போர்டு எடுத்து வரக் கூறினார். அவர் என்னுடன் நன்றாகச் செஸ் விளையாடினார். அந்த விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்” எனக் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் அவருக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பிரக்ஞானந்தாவையே […]

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கு எதிராக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் தனது மனுவில், எஸ்.ஐ.ஆர். பணியானது தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, வாக்காளர் […]

விமான நிறுவனங்களை எச்சரித்த ட்ரம்ப்!

விமான நிறுவனங்களை எச்சரித்த ட்ரம்ப்!

வெனிசுலாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு ட்ரம்ப் புதிய கட்டளையை பிறப்பித்துள்ளார். அதன்படி வெனிசுலா வான்வெளியை முழுவதுமாக மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு மோசமடைந்து வருவதாலும், இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதாலும், வெனிசுலா மீது பறக்கும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் (FAA) விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை” எதிர்த்துப் போராடவும், […]

இந்தோனேசியாவில் தொடரும் சோகம் – 248 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் தொடரும் சோகம் – 248 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் தொடரும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 3000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 78 பேர் காணாமல்போயுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவு மற்றம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சென்றடைவதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி தேவைப்படுபவர்களை அணுகுவதில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி சவாலான […]