வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை

Spread the love

தனது செயல்பாடுகள் குறித்து பொய்யான தகவல்கள் வெளியிடுவதாகக் கூறி பிரபல நாளிதழ்கள் வெள்ளை மாளிகைக்குள் வருவதை தடைசெய்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்

அமெரிக்க அதிபரின் டொனால்ட் ட்ரம்ப் தனது முக்கிய கொள்கைகளையும், முடிவுகளையும் தொடர்ந்து விமர்சித்து வரும் நாளிதழ்களுக்கு சமீப காலமாக கண்டனம் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல நாளிதழ்களான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் போன்றவற்றுக்கான சந்தாத் தொகையை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்றும் அவை மக்கள் விரோதிகள் என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார்.

மேலும், ஏனைய அரசு துறைகளும் தனது உத்தரவை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் பாருங்க :

பிகில் – விமர்சனம்.

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்து

நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – துணை முதலமைச்சர்