கியார் புயலால் கர்நாடகக் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு

Spread the love

அரபிக் கடலில் உருவாகியுள்ள கியார் புயலால் கர்நாடகத்தின் கடற்கரைப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களுக்கு மேற்கே அரபிக் கடலில் கியார் புயல் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று வடக்குநோக்கி நகர்ந்து அடுத்த 5 நாட்களில் ஓமன் கடற்கரையைத் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயலின் தாக்கத்தால் கர்நாடகத்தின் மங்களூர் அருகே உள்ளல் என்னுமிடத்தில் கடல், வழக்கத்துக்கு மாறாகக் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கர்நாடக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் பாருங்க :

பிகில் – விமர்சனம்.

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்து

நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – துணை முதலமைச்சர்